Oct 17, 2025
Thisaigal NewsYouTube
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு!
உலகச் செய்திகள்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு!

Share:

மணிலா, அக்டோபர்.02-

பிலிப்பைன்சில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையில், இந்த நிலநடுக்கத்தினால் 294 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக பிலிப்பைன்ஸ் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு கூறுகின்றது.

செபு தீவில் நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயம் முதல் வீடுகள் வரை பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 2013-ஆம் ஆண்டு, செபு தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 222 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News