Oct 17, 2025
Thisaigal NewsYouTube
கென்யாவில் துக்க நிகழ்வில் பங்கேற்று திரும்பிய போது சாலை விபத்தில் 21 பேர் பலி
உலகச் செய்திகள்

கென்யாவில் துக்க நிகழ்வில் பங்கேற்று திரும்பிய போது சாலை விபத்தில் 21 பேர் பலி

Share:

நைரோபி, ஆகஸ்ட்.10-

கென்யாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 21 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு கென்யாவில் ககமேகா என்ற நகரத்தில் ஓர் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்ள ஏராளமானோர் சென்றிருந்தனர்.

அவர்கள் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு ஒரு பேருந்தில் கிசுமு கவுண்டி என்ற பகுதிக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். வழியில் ஒரு வளைவில் பஸ் திரும்பும் போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 21 பேர் பலியாகினர். அவர்கள் 10 பெண்கள், 10 ஆண்கள் மற்றும் 10 வயதுடைய சிறுமி ஆவர். விபத்தில் 29 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அங்குள்ளோர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். முறையான சாலை வசதிகள் இல்லாததே விபத்துக்குக் காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Related News

கென்யாவில் துக்க நிகழ்வில் பங்கேற்று திரும்பிய போது சாலை ... | Thisaigal News