காசா, மார்ச் 21 -
காஸா வட்டாரத்தில் உடனடியாகச் சண்டையை நிறுத்தக் கோரும் நகல் தீர்மானத்தை அமெரிக்கா ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு மன்றத்திடம் சமர்ப்பித்துள்ளது.
பிணையாளிகளின் விடுதலையைப் பெறும் வகையிலும் தீர்மானத்தை அமைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
உலக நாடுகள் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ள அவர் சண்டைநிறுத்தத்தை எட்டுவதற்கான அரசதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து ஆறாவது முறையாக அவர் மத்திய கிழக்கு வட்டாரத்துக்குப் போயிருக்கிறார்.போருக்குப் பிறகு காஸாவின் நிலையைத் திட்டமிடும் வகையில் திரு. பிளிங்கனின் பயணம் அமைகிறது.