Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பஞ்சாப்பில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: ஐவர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பஞ்சாப்பில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: ஐவர் பலி

சண்டிகர், மே.30-

பஞ்சாப்பில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐவர் உடல் கருகி உயிரிழந்தனர். ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக மாண்டனர்.

மேலும் 34 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுகிறது. விபத்தில் இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து தரைமட்டமாகியது. உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →