பாங்கோக், டிசம்பர்.10-
தாய்லாந்தின் தலைநகர் பாங்கோக்கில் நடைபெற்ற 74வது மிஸ் யூனிவர்ஸ் போட்டியில், மேடையில் கால் இடறி கீழே விழுந்த Miss Jamaica அழகி Gabrielle Henry கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மூளைக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழப்பு, எலும்பு முறிவு, முகத்தில் காயங்கள் உள்ளிட்ட கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ள அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
மிஸ் யுனிவர்ஸ் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, 24 மணி நேர கண்காணிப்புடன் அவர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், அவரது உடல் நிலையில் முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 வயதான Jamaica Gabrielle Henry கடந்த நவம்பர் 19-ஆம் தேதி, பாங்கோக்கில் நடைபெற்ற போட்டியில், மேடையில் கால் இடறி கீழே விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








