புதுடில்லி, டிசம்பர்.22-
டில்லியிலிருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம் AI887 புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் வலது இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, எண்ணெய் அழுத்தம் பூஜ்ஜியமாகக் குறைந்ததால், விமானிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் டெல்லிக்குத் திரும்பி, பத்திரமாகத் தரையிறக்கினர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலையில் நிகழ்ந்தது. விமானிகள் நிலையான இயக்க நடைமுறைகளைப் பின்பற்றி, விமானத்தை டில்லிக்குத் திருப்பி, அவசரமாகத் தரையிறக்கினர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிருடற் சேதம் எதுவும் நிகழ்வில்லை என்று ஏர் இந்தியா அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சிவில் விமானப் போக்குவரத்து இலாகாவான DGCA, இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணையை தொடக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.








