Oct 23, 2026
Thisaigal NewsYouTube

நேப்பாளச் சிறையில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் தப்பியோட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நேப்பாளச் சிறையில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் தப்பியோட்டம்

கட்மாண்டு, அக்டோபர்.13-

நேப்பாளத்தில் இளைஞர்கள் நடத்தி போராட்டத்திற்குப் பிறகு, சிறைகளில் இருந்து 540 இந்திய கைதிகள் தப்பியோடி விட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நேப்பாளத்தில், ஊழல் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, அந்நாட்டைச் சேர்ந்த, 'ஜென் இசட்' எனும் இளம் தலைமுறையினர் கடந்த மாதம் அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, 76 பேர் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, தன் பதவியை ராஜினாமா செய்ததுடன், அரசையும் கலைத்தார். அந்நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுசீலா இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், நேப்பாளத்தில் இளைஞர்கள் நடத்தி போராட்டத்திற்குப் பிறகு, சிறைகளில் இருந்து 540 இந்திய கைதிகள் தப்பியோடி விட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தின் போது நேப்பாளத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் இருந்து சுமார் 13,000 பேர் தப்பியோடியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதில், நேப்பாளத்தைச் சேர்ந்த 5,000 தண்டனைக் கைதிகளும், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்த 108 கைதிகளும் தப்பியோடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறையில் இருந்து கைதிகள் தப்பியது தொடர்பாக நாடு முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தப்பியோடிய கைதிகள் அந்தந்த சிறைகளுக்கு திரும்புமாறு அந்நாட்டு உள்துறை அமைச்சும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →