சிட்னி, டிசம்பர்.14-
ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரையில் ஏராளமானோர் கூடியிருந்தனர். நிகழ்ச்சியொன்றுக்காக பலர் கூடியிருந்த நிலையில், அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அவர்களைக் குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இச்சம்பவத்தில் குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதை போலீசார் உறுதிச் செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒருவன் கொல்லப்பட்ட நிலையில், மற்றொருவன் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், போலீசாரும், அவசர கால மீட்புப் படையினரும் மக்களைக் காப்பாற்ற பணியாற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். போலீசாருடன் பேசியுள்ளேன். அவர்கள் கூறும் அறிவுரையை மக்கள் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.








