சிங்கப்பூர், செப்டம்பர்.20-
கடந்த ஆண்டு தமது முன்னாள் கணவரால் மலேசியாவிற்குக் கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் தமது 7 வயது மகன் பற்றி தகவல் அளிப்பவருக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த மாது ஒருவர் 50 ஆயிரம் ரிங்கிட் வெகுமதி அளிக்க முன்வந்துள்ளார்.
தமது மகன் கலேப் லியாங் வெய் என்பவரை மீட்கும் அளவிற்குத் தகவல் கொடுப்பவர்களுக்கு இத்தொகையைத் தாம் அன்பளிப்பாக வழங்குவதாக டேய்லின் லிமோந்தே அல்வாரேஸ் என்று மாது, இன்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டு காலமாக தமது மகனைப் பார்க்காதது, பெரும் ஏக்கத்துடனும், ஏமாற்றத்துடன் இருப்பதாகவும் இது குறித்து புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் புகார் அளித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.