இஸ்லாமாபாத்: 26/11 மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் மாஸ்டர் மைண்ட் ஹபிஸ் சயத்தின் நெருங்கிய கூட்டாளியான முப்தி கைசர் பாரூர் பாகிஸ்தானனில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அதுபற்றிய திடுக்கிடும் தவல் வெளியாகி உள்ளது.
2008.. நவம்பர் 26.. இந்தியாவை பொறுத்தமட்டில் மிகவும் சோகமான நாளாகும். அன்றைய தினம் யாரும் எதிர்பாராத வகையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நவீன துப்பாக்கிகளுடன் தெற்கு மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல், டிரிடெண்ட் ஹோட்டல், சிஎஸ்டி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, யூதர்களின் வழிபாட்டுத்தலம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக சுட்டனர்.
இதில் மொத்தம் 175 பேர் வரை பலியாகினர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ-தொய்பா தீவிரவாத அமைப்பால் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் நவம்பர் மாதம் (11வது மாதம்) 26ம் தேதி நடந்ததால் 26/11 என அழைக்கப்படுகிறது. இந்த கொடூரமான தாக்குதலை லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு நிகழ்த்தியது. கராச்சி துறைமுகத்திலிருந்து சாட்டிலைட் போன்களுடன் மும்பைக்கு படகுகளில் வந்து அவர்கள் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக வலம் வருகின்றனர். அவர்களை நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசு இன்னும் முன்வரவில்லை. தொடர்ந்து தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரவணைத்து வருகிறது. இந்த மும்பை தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்ட்டாக இருந்தவர் லஷ்கர் இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் செல்வாக்கு பெற்ற தலைவரான ஹபீஸ் சயத் ஆவார்.