பெய்ஜிங், டிசம்பர்.08-
மர்மமான முறையில் காணாமல் போன மலேசிய ஏர்லைன்சுக்குச் சொந்தமான MH370 விமானத்தில் பயணம் செய்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2.9 மில்லியன் Yuan அல்லது 1.686 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாக வழங்கும்படி மலேசிய ஏர்லைன்சுக்கு பெய்ஜிங் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள எட்டு குடும்பத்தினருக்கும் தலா 1.686 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக CCTV ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்தது.
இழப்பீடு தொடர்பில் இதுவரை 47 குடும்பங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ள வேளையில் இன்னும் 23 வழக்குகள் தொடர்ந்து நிலுவையில் இருப்பதாக அது தெரிவித்துள்ளது.
பெய்ஜிங் நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பில் மலேசிய ஏர்லைன்ஸ் இன்னும் கருத்துரைக்கவில்லை.








