அமெரிக்க,ஜூலை 15-
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டொனால்ட் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ஜோ பைடன் முதல் பிரதமர் மோடி வரை கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்யும் போது அவர் மீது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், தாக்குபவர் கூரையின் மீது நின்றதை கண்டதாக கிரெக் என்ற சாட்சி பிபிசியிடம் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், சம்பந்தப்பட்ட இளைஞர் எங்களிடமிருந்து 50 அடி தூரத்தில் கட்டிடத்தை ஊர்ந்து சென்றான். அவரிடம் துப்பாக்கி இருந்தது” என்று தெரிவித்தார்.
