Oct 30, 2025
Thisaigal NewsYouTube
12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை: டிரம்ப் அதிரடி
உலகச் செய்திகள்

12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை: டிரம்ப் அதிரடி

Share:

வாஷிங்டன், ஜூன்.09-

12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அதிபர் டொனால்டு டிரம்ப் தடை விதித்துள்ளார். தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்கானிஸ்தான், மியன்மார், Chad, Republic of the Congo, Equatorial Guinea, Eritrea, Haiti, ஈரான், லிபியா, சொமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்குள் நுழைய இன்று ஜுன் 9 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல், புருண்டி, கியூபா, லாவுஸ், Sierra Leone, Togo, Turkmenistan மற்றும் Venezuela ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு அதிரடியாக வர்த்தக வரியை உயர்த்தினார். மேலும், அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிந்து அவர்களைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.

இந்நிலையில் டொனால்டு டிரம்பின் ஆகக் கடைசி அதிரடி நடவடிக்கையாக அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு 12 நாடுகளுக்கு தடை விதித்துள்ளார்.

Related News