பேங்காக், ஜூலை.15-
வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளுக்கு தாய்லாந்து மண்ணில் கால் பதிப்பு எனும் புதியக் கட்டணத்தை விதிக்கவிருந்த தாய்லாந்து அரசாங்கம், அந்தக் கட்டண நடைமுறையை ஒத்தி வைத்துள்ளது.
அந்தப் புதியக் கட்டணம், இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்துவதாக இருந்தது. உலகளாவிய நிலையில், நிலையற்ற சூழல் நிலவி வருவதைத் தொடர்ந்து அந்தப் புதியக் கட்டண விதிப்பை இப்போது அமல்படுத்துவது பொருத்தமற்றது என்று தாய்லாந்து சுற்றுலா, விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு வரை இந்தக் கட்டணத்தைத் தாய்லாந்து ஒத்தி வைத்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.








