ரோம்: நாம் 19 வயதில் கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருப்போம். ஆனால், இந்த நபர் 19 வயதிலேயே உலகின் டாப் பணக்காரர்கள் லிஸ்டில் இடம் பிடித்துவிட்டார். யார் அவர்? எப்படி அவரால் குறுகிய காலத்தில் பணத்தைக் குவிக்க முடிந்தது என்பதைப் பார்க்கலாம்.
பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி இந்தாண்டும் கோடீஸ்வரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
இதில் பிரான்ஸை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், எலான் மஸ்க், ஜெப் பேசாஸ் (அமேசான்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்தியாவில் இருந்து முகேஷ் அம்பானி 9ஆவது இடத்தில் இருக்கிறார்.
கோடீஸ்வரர்: இருப்பினும், அனைவரையும் தாண்டி இந்த லிஸ்டில் இருக்கும் கிளெமெண்டே டெல் வெச்சியோ என்பவர் மீதே அனைவரது பார்வையும் சென்றது. ஏனென்றால், அவருக்கு வயது வெறும் 19 தான். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இந்த டீன் ஏஜ் இளைஞர் லிஸ்ட்டில் 818ஆவது இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 3.5 பில்லியன், அதாவது 29 ஆயிரம் கோடியாகும்.