கேரளா, மார்ச் 28 -
தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் ஜோசப் எனும் சிறுநீரகவியல் மருத்துவர் கடந்த 10 ஆண்டுகளில் 1,018 சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகளைச் செய்துமுடித்துள்ளார்
2014இல் கொச்சியிலுள்ள மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்த அவர் 2015ஆம் ஆண்டு முதல் அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டார்.
சிறுநீரகச் செயலிழப்புப் பிரச்சினை அதிகரித்துவருவதற்கு மோசமான நீரிழிவு நோய் காரணம் என்றார் அவர்.
இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் 30இல் இருந்து 50 வயதுக்கும் 20இல் இருந்து 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றார் அந்த மருத்துவர்.
அந்த மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை கடந்த 1986ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதுவரை சுமார் 2,600 சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகள் அந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.