புதுடெல்லி, டிசம்பர்.19-
வட இந்தியாவின் பல பகுதிகளில் குளிர் காலநிலை மற்றும் மூடுபனி நிலவியதால், டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக டில்லியில் கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. கடும் பனிப்பொழிவால், வாகனப் போக்குவரத்து போல, விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. டில்லி விமான நிலையத்திலிருந்து 2 சர்வதேச விமானங்கள் உட்பட புறப்பட இருந்த 79 விமானங்களும், 2 சர்வதேச விமானங்கள் உட்பட வர இருந்த 73 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.
அடர்ந்த மூடுபனி காரணமாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டது. சில விமானச் சேவையில் தாமதங்கள் ஏற்படக்கூடும். பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு விழிப்புடன் இருக்க வேண்டும். விமான நிறுவனங்களின் இணையதளத்தில் பயணிகள் தங்கள் விமானங்களின் தற்போதையை நிலவரங்களை சரிபார்க்க வேண்டும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.








