நொம் பேன், ஜூலை.30-
தாய்லாந்துடனான எல்லை மோதலைத் தீர்ப்பதில் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கம்போடியா, இரு அண்டை நாடுகளுக்கும் இடையே கடந்த திங்களன்று புத்ராஜெயாவில் ஒரு சிறப்புச் சந்திப்பை ஏற்படுத்தியதற்காக மலேசியாவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க மலேசிய ஆயுதப் படைகளின் தளபதி டான் ஶ்ரீ டத்தோ முகமட் நிஸாம் ஜாஃபார் தலைமையில் ஒரு குழுவை மலேசியா நேற்று கம்போடியாவிற்கு அனுப்பியது.
தற்போதைய ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா, தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு ஆயுதப் படைத் தளபதி தலைமையிலான தூதுக் குழுவை அனுப்பி விரைந்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கு மலேசியாவிற்கு நன்றி கூற கம்போடியா கடமைப்பட்டுள்ளதாக ஓர் அறிக்கையில் அதன் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.








