பெரு, ஜூலை.26-
பெருவின் மத்தியில் அண்டெஸ் மலைப்பகுதியில் பயணிகளுடன் சென்ற பேருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் மரணமடைந்தனர். 24 பேர் காயமுற்றனர். சம்பவத்தின் போது அப்பேருந்தில் 66 பேர் இருந்தனர். லிமாவிலிருந்து அந்த இரண்டடுக்கு பேருந்து லா மெர்சிட் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த போது அவ்விபத்து ஏற்பட்டது.
வளைவான பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில் அப்பேருந்து தடம் புரண்டு ஆற்றில் கவிந்தது. விபத்துக்கு முன் பேருந்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.








