பாங்கோக், நவம்பர்.10-
கோலாலம்பூரில் நடைபெற்ற 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் முன்னிலையில் கம்போடியாவுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதை நிறுத்தி வைத்துள்ளதாக தாய்லாந்து இன்று அறிவித்துள்ளது.
தாய்லாந்து – கம்போடியா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த நில வெடி சம்பவத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு இராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கோலாலம்பூரில் கம்போடியாவுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அமல்படுத்தப் போவதில்லை என்று தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul அறிவித்துள்ளார்.
ஆகக் கடைசியாக நிகழ்ந்த இந்த நில வெடிச் சம்பவம் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தம் தோல்வி அடையும் அளவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.








