Apr 21, 2026
Thisaigal NewsYouTube
டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
உலகச் செய்திகள்

டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Share:

புதுடில்லி, நவம்பர்.13-

டில்லியில் கார் குண்டு வெடிப்புத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10ம் தேதி டில்லி செங்கோட்டையில் உமர் என்பவர் கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றினார். இத்தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். தலைநகரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக என்ஐஏ குழு அமைத்து விசாரித்து வருகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் டாக்டர்கள் போன்ற உயர்நிலையில் உள்ளவர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. மேலும், இது தொடர்பாக அடுத்தடுத்து டாக்டர்கள் சிக்கி வருகின்றனர்.

கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து டில்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் குறைகேட்பு பக்கத்தில், டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இதே போல, சென்னை, கோவா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.

அச்சோதனையில் தான் அது புரளி என தெரிய வந்தது. இதே போல, பிற பகுதியில் உள்ள விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Related News

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!