Oct 16, 2025
Thisaigal NewsYouTube
வங்காளதேச ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயில் 9 பேர் பலி
உலகச் செய்திகள்

வங்காளதேச ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயில் 9 பேர் பலி

Share:

டக்கா, அக்டோபர்.14-

வங்கதேசத்தில் ரசாயனக் கிடங்கு மற்றும் ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

வங்கதேசத்தின் மிர்பூரில் உள்ள ஜவுளி தயாரிப்பு ஆலை மற்றும் ரசாயனக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. ரசாயன ஆலையில் பிளீச்சிங் பவுடர், பிளாஸ்டிக் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்டவை வைக்கப்பட்டு இருந்தன. இதனால், தீ மளமளவென பரவியது. ஜவுளி ஆலையிலும் தீ வேகமாகப் பரவியது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Related News

வங்காளதேச ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயில் 9 பேர் பலி | Thisaigal News