Oct 21, 2025
Thisaigal NewsYouTube
திடீரென கழிவுநீர் தொட்டியில் இறங்கிய பில் கேட்ஸ்! AI எல்லாம் இல்லை "உண்மைதான்!" என்ன காரணம் தெரியுமா
உலகச் செய்திகள்

திடீரென கழிவுநீர் தொட்டியில் இறங்கிய பில் கேட்ஸ்! AI எல்லாம் இல்லை "உண்மைதான்!" என்ன காரணம் தெரியுமா

Share:

பிரஸ்ஸல்ஸ்: உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் திடீரென பெல்ஜியம் நாட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ். நாம் அனைவருமே இவரது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயங்கும் கணினிகளை நிச்சயம் பயன்படுத்தி இருப்போம். இப்போதும் கூட கணினிகளில் மைக்ரோசாப்ட் நிறுவனமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நீண்ட காலம் உலகின் பெரும் பணக்காரராக இருந்த பில் கேட்ஸ், சில ஆண்டுகளுக்கு முன்பு தான் மைக்ரோசாப்ட் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகினார். இவருக்குப் பதிலாக சத்யா நாதெல்லா தான் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

பில்கேட்ஸ்: மைக்ரோசாப்டில் இருந்து ஓய்வு பெற்ற பெற்ற பில் கேட்ஸ் பல்வேறு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதற்கிடையே பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் அவர் இறங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவரே இணையத்திலும் பகிர்ந்துள்ளார். கடந்த நவம்பர் 19ஆம் தேதி உலக கழிப்பறை தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், அதன் ஒரு பகுதியாக அவர் இதைச் செய்துள்ளார்.

பிரஸ்ஸல்ஸில் கழிவுநீர் அருங்காட்சியகம் இருக்கும் நிலையில், அதைப் பார்வையிட பில் கேட்ஸ் கழிநீர் தடத்தில் இறங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் பில் கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளார். கழிவுநீர் பாதையில் இறங்கும் பில் கேட்ஸ், பிரஸ்ஸல்ஸின் கழிவுநீர் அமைப்பின் மறைக்கப்பட்ட வரலாற்றை ஆய்வு செய்வது அந்த வீடியோவில் தெரிகிறது. மேலும், ஆய்வாளர்களுடன் கழிவுநீர் பாதை குறித்து அவர் ஆலோசிப்பதும் அதில் இருக்கிறது.

Related News