Oct 9, 2026
Thisaigal NewsYouTube

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்த்தா, ஜூலை.14-

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 6.7 ஆகப் பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் மாலுக்கு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டங்கள், வீடுகள் குலுங்கின.

அச்சம் அடைந்த பொதுமக்கள் பீதியுற்று வீதிகளில் திரண்டனர். பயத்தின் காரணமாக மீண்டும் வீடுகளுக்குள் செல்லாமல் அவர்கள் சாலையோரம் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆகப் பதிவாகியதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட தரவுகளின் படி சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்ற விவரங்களும் வெளியாகவில்லை.

கடந்த 2004ம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சுனாமி, இந்தோனேசியாவின் சுமத்ரா அருகே மையம் கொண்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →