Jan 5, 2026
Thisaigal NewsYouTube
வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்காவின் செயல்பாடு அனைத்துலகச் சட்டத்திற்கு எதிரானது - பிரதமர் அன்வார் கடும் கண்டனம்!
உலகச் செய்திகள்

வெனிசுலா விவகாரத்தில் அமெரிக்காவின் செயல்பாடு அனைத்துலகச் சட்டத்திற்கு எதிரானது - பிரதமர் அன்வார் கடும் கண்டனம்!

Share:

கோலாலம்பூர், ஜனவரி.04-

வெனிசுலா அதிபர் Nicolas Maduroவையும் அவரது மனைவியையும் அமெரிக்க ஆயுதப்படை Caracasஸில் வைத்து அதிரடியாகக் கைது செய்து, நியூயார்க்கிற்கு கடத்திச் சென்றிருப்பது ஒட்டு மொத்த உலகையே உலுக்கியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையை "அனைத்துலகச் சட்டங்களை அப்பட்டமாக மீறும் செயல்" என வன்மையாகக் கண்டித்துள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், Maduro தம்பதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என முழக்கமிட்டுள்ளார்.

தன்னாட்சி கொண்ட ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்காமல் ஆயுதப்படை பலத்தைப் பயன்படுத்தித் தலைவர்களை அப்புறப்படுத்துவது, உலக நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசலையும் ஆபத்தான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார். "Venezuela மக்களின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை அந்த நாட்டு மக்களுக்கே உண்டு" என்று குறிப்பிட்டப் பிரதமர், வெளிநாட்டுத் தலையீடுகள் நன்மையை விடப் பேரழிவையே தரும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் நடத்தியுள்ள இந்த ஆயுதப்படை நடவடிக்கை, உலக அரங்கில் பெரும் அரசியல் போரை மூட்டியுள்ள நிலையில், மலேசியா தனது நீதிக்கான குரலை உலக மேடையில் ஓங்கி ஒலிக்கச் செய்துள்ளது.

Related News