அபுதாபியில் உள்ள குடும்ப பராமரிப்பு அமைப்பான எஃப்சிஏ-வும் அந்நாட்டின் காலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையில் தன்னுடைய பங்களிப்பை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வெளியாகி இருக்கும் கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க
ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரங்களில் துபாயும் ஒன்றாகும். இங்கு சிஓபி28 மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காலநிலை மாற்றத்திற்கு எதிராக பல்வேறு முக்கிய திட்டங்களை இந்த மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அபுதாபியில் உள்ள குடும்ப பராமரிப்பு அமைப்பான எஃப்சிஏ, தானும் காலைநிலை மாற்றத்திற்கு எதிராகவும், சுற்றுச்சூழல் நிலைத் தன்மைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.
இதற்காக அது ஐக்கிய அரபு அமீரகத்தின் இன்டிபென்டன்ட் காலநிலை மாற்ற முடுக்கிகளுடன் (UICCA) இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் இருவரும் இணைந்து மக்கள் மத்தியில் சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வை உணர்வுகளாக வளர்க்க உறுதிப் பூண்டிருக்கின்றனர். மேலும், இந்த கோட்பாட்டை நோக்கி மக்களை அணி திரட்டவும் அவர்கள் முயற்சி செய்வார்கள். இதுவே எஃப்சிஏ-வின் முக்கிய இலக்காகும். இதற்காக எஃப்சி மற்றும் யுஐசிசிஏ சில திட்டங்களை வகுத்து இருக்கின்றது.
சமூகம் சார்ந்த சில நிகழ்ச்சிகள் அடுத்த ஆண்டில் அபு தாபி முழுவதும் நடைபெற இருக்கின்றன. இந்த கூட்டம் மக்களை அணி திரட்ட மட்டுமல்ல, சில ஒர்க்ஷாப்புகளும் நடத்தப்பட இருக்கின்றது. குறிப்பாக, இதுதவிர, காலா நிலை மாற்றத்திற்கு எதிரான பேரணி, விழிப்புணர்வு பேச்சுகள் மற்றும் பல நடவடிக்கைகளை அங்கு செய்ய எஃப்சிஏ மற்றும் யுஐசிசிஏ திட்டமிட்டு இருக்கின்றது.