Jun 9, 2026
Thisaigal NewsYouTube
118 சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல் இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் – விஜயிடம் ஆளுநர் திட்டவட்டம்
உலகச் செய்திகள்

118 சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல் இருந்தால் மட்டுமே ஆட்சியமைக்க முடியும் – விஜயிடம் ஆளுநர் திட்டவட்டம்

Share:

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக 108 தொகுதிகளை வென்ற விஜய் தலைமையிலான தவெக கட்சி, இன்னும் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்பதால் ஆட்சியமைக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல், விஜய் தலைமையிலான தவெக கட்சியானது ஆட்சியமைக்க இயலாது என தமிழக ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 113 சட்டமன்ற உறுப்பினர்களுடன் இன்று ஆளுநரைச் சந்தித்த விஜயிடம், பெரும்பான்மை குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில்,

113 சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைப் பெற்றுக் கொண்ட ஆளுநர், ஆட்சிமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல் தேவையென வலியுறுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்றாலும், அதனைப் பெற்றுக் கொண்ட ஆளுநர், ஆட்சிமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல் தேவையென வலியுறுத்தியதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நேற்று தவெக கட்சியுடன் கூட்டணியை அறிவித்த காங்கிரஸ் கட்சி, தமது 5 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை விஜய்க்கு வழங்கியது.

இதன் மூலம் தவெக கட்சியின் பலமானது 113 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், இன்னும் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் விஜய் தலைமையிலான தவெக கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், தொடர்ந்து அதில் இழுபறி நீடித்து வருகின்றது.

Related News