பெய்ஜிங்: மிகவும் அரிய ஒரு நிகழ்வாக இந்தியாவைப் பாராட்டும் வகையிலான கட்டுரை ஒன்று சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே மோதல் இருந்து வருவது அனைவருக்கும் தெரியும்.. அதிலும் குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு நிலைமை மிக மோசமாக மாறியது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தித்தாள் இந்தியாவைப் புகழ்ந்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீன ஊடகம்: இந்தியாவின் நம்பிக்கை மற்றும் தனித்துவமான பாரதத்தை வடிவமைப்பதில் முனைப்பான அணுகுமுறையை குளோபல் டைம்ஸ் பாராட்டியுள்ளது. சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வு மையத்தின் இயக்குநரான ஜாங் ஜியாடோங் எழுதிய இந்த கட்டுரை ஜன.2ஆம் தேதி வெளியானது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்கச் சாதனைகளைச் செய்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகத்தில் அடைந்த முன்னேற்றம் மற்றும் சர்வதேச உறவுகள், குறிப்பாகச் சீனாவுடனான அணுகுமுறையில் மாற்றம் ஆகியவை குறித்தும் ஜாக் அந்த கட்டுரையில் விவரித்துள்ளார். அந்த கட்டுரையில், "ஒருபுறம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நிர்வாகத்தில் ஆகியவற்றில் இந்தியா பெரும் சாதனைகளைப் படைத்துள்ளது. அதன் பொருளாதாரம் வேகம் பெற்றுள்ளது... வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாறுவதற்கான பாதையில் உள்ளது.
பாராட்டு: உதாரணமாக, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வை எடுத்துக் கொள்வோம். முன்பெல்லாம்இந்தியப் பிரதிநிதிகள் வர்த்தக ஏற்றத்தாழ்வைக் குறைக்கச் சீனாவின் நடவடிக்கைகளில் முதன்மையாகக் கவனம் செலுத்தினர். ஆனால் இப்போது அவர்கள் இந்தியாவின் ஏற்றுமதி திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.