Oct 30, 2025
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

ஏர் இந்தியா விமானம் அவசரத் தரையிறக்கம்

Share:

பாங்கோக், ஜூன்.13-

ஏர் இந்தியா, போயிங் டிரிம்லைனர் விமானம், விபத்துக்குள்ளாகி 241 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தின் சோகம், இன்னமும் மறையாத நிலையில, ஏர் இந்தியாவின் மற்றொரு விமானம், இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் புக்கெட் தீவில் உள்ள அனைனத்துலக விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் இன்று வெள்ளிக்கிழமை காலையில் புறப்பட்டது. ஏர் இந்தியாவின் AI 379 விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர். வானில் பறந்த சிறிது நேரத்திலேயே, அந்த விமானம் அவசர அவசரமாக மீண்டும் புக்கெட் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. இதனால், அந்த விமானத்தில் பயணித்த 156 பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

விமானம், இன்று காலை 9.30 மணியளவில் புக்கெட் தீவுக்கு அருகே அந்தமான் தீவு, வான்போக்குவரத்துப் பாதையில் பறந்து கொண்டு இருந்த போது, விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அனாமதேய அழைப்பை விமானக் கட்டுப்பாட்டுக் கோபுரம் பெற்றது. இதனைத் தொடர்ந்து, விமானத்தை உடனயாக புக்கெட் தீவுக்குத் திருப்பும்படி விமானிக்கு உத்தரவிடப்பட்டதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானம், அந்தமான் தீவு வான்போக்குவரத்துப் பாதையில் திருப்பப்படுவதை Flightradar24 தெளிவாகக் காட்டியுள்ளது.

Related News