வாஷிங்டன்: சூரியனைக் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள், சூரியனின் மேற்பரப்பில் ரொம்பவே வினோதமான சூரிய புள்ளிகளைக் கண்டுபிடித்துள்ளனர். இது சூரியனின் வைப்ரேஷன் பேர்டனில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நமது உலகிற்கும் சரி, இந்த சூரியக் குடும்பத்திற்கும் சரி ரொம்பவே முக்கியமானது சூரியன். நமது பூமியில் அனைத்து உயிரினங்களுக்கும் சூரியனை அடிப்படையாக வைத்தே இயங்கி வருகிறது.
இதனால் சூரியன் குறித்துத் தெரிந்து கொள்வது ரொம்பவே அவசியமான ஒன்றாக மாறுகிறது. இதன் காரணமாக உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் சூரியன் குறித்தும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சூரியன் குறித்த ஆய்வு: இந்திய ஆய்வாளர்கள் கூட ஆத்தியா என்ற சாட்டிலைட்டை சூரியனை ஆய்வு செய்ய அனுப்பியுள்ளனர். இதேபோல உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. இதற்கிடையே சூரியனின் தொலைதூரத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய சூரிய புள்ளியை ஆய்வாளர்கள் ஹீலியோசிஸ்மாலஜி தொழில்நுட்பத்தை வைத்துக் கண்டுபிடித்துள்ளனர்.