Oct 13, 2026
Thisaigal NewsYouTube

'உங்களை மீட்க வருகிறோம்'... சுனிதா, வில்மோருக்கு அதிபர் டிரம்ப் கொடுத்த செய்தி

திசைகள் செய்திப்பிரிவு
Share:

வாஷிங்டன், மார்ச்.07-

'உங்களை மீட்க நாங்கள் வருகிறோம்' என்று விண்வெளியில் இருந்து திரும்ப முடியாமல் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விண்வெளிக்குச் சென்று தங்கி ஆய்வு செய்ய நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸும், வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதியன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால், இருவரும் 9 மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர்.

இதனிடையே, அரசியல் காரணங்களுக்காக, முந்தைய பைடனின் அரசால், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியிலேயே கைவிடப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், அவர்களை பூமிக்கு அழைத்து வருமாறு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு கோரிக்கை விடுத்ததாகவும் கூறியிருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட எலான் மஸ்க், மார்ச் மாதத்தில் ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ-10 விண்கலத்தில் திரும்ப உள்ளதாக கூறினார். இந்த நிலையில், வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு ஆறுதலாக அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →