Oct 17, 2025
Thisaigal NewsYouTube
நியூயார்க் உணவகத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி, எண்மர் காயம்
உலகச் செய்திகள்

நியூயார்க் உணவகத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி, எண்மர் காயம்

Share:

நியூயார்க், ஆகஸ்ட்.17-

நியூயார்க்கில் உணவகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

ப்ரூக்லைன் பகுதியில் உள்ள உணவகத்தின் உள்ளே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அதில், 27 மற்றும் 35 வயதுடைய நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 3வது நபரின் வயது குறித்த தகவல் தெரியவில்லை. இதுவரையில் குற்றவாளி யார் என்று அடையாளம் காணப்படாததால், கைது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை.

சம்பவ இடத்தில் 36 தோட்டாக்களின் உறைகள் கண்டெடுக்கப்பட்டன. 8 பேர் பலத்த காயமடைந்தனர். என்ன நடந்தது, துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் கூறியுள்ளனர்.

Related News

நியூயார்க் உணவகத்தில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி, எண்மர... | Thisaigal News