Oct 21, 2025
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

எங்கும் கேட்ட ‛மோடி.. மோடி..’ கோஷம்! துபாயில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு! சிலிர்த்துப்போன மோடி

Share:

துபாய்: இன்று நடக்கும் உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி துபாய் சென்றுள்ளார். துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ‛‛மோடி.. மோடி.. பாரத் மாதா கீ ஜே..'' உள்ளிட்ட கோஷங்களை அவர்கள் எழுப்பி அரங்கத்தை அதிர வைத்தனர்.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் என்பது பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. உலகம் முழுவதும் பருவம் தவறிய மழை, மழை வெள்ளம் உள்ளிட்டவற்றால் பல நாடுகள் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவை அனைத்துக்கும் முக்கிய காரணம் என்பது பூமி வெப்பமடைவது தான் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பூமி வெப்பமடைவதை தடுக்க அனைத்து நாடுகள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நடந்து வருகின்றன.

மேலும் பூமி வெப்பமயமாதல், காலநிலை மாற்ற பிரச்சனைகளை சரிசெய்ய பல உலக நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து திட்டங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் உலக காலநிலை மாற்ற நடவடிக்கை என்ற பெயரில் துபாயில் உச்சிமாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்,அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்,உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கும் அழைப்பு வந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் துபாய் புறப்பட்டு சென்றார். துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related News