Oct 20, 2025
Thisaigal NewsYouTube
கேகேஆர் இன்னும் 3 டிராபிகளை வெல்ல வேண்டும் – கவுதம் காம்பீர்
உலகச் செய்திகள்

கேகேஆர் இன்னும் 3 டிராபிகளை வெல்ல வேண்டும் – கவுதம் காம்பீர்

Share:

இந்தியா, மே 31-

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது வெற்றி பெற்று 3ஆவது முறையாக டிராபியை வென்ற நிலையில் இன்னும் 3 டிராபிகளை வெல்ல வேண்டும் என்று ஆலோசகர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற 17ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியனானது. இந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது விளையாடிய 14 லீக் போட்டிகளில் 9ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திலேயே இருந்தது.

அடுத்து நடைபெற்ற முதல் தகுதிச் சுற்று போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து நடந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் விளையாடிய கொல்கத்தா அணியானது 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 3ஆவது முறையாக ஐபிஎல் டிராபியை வென்றது. கொல்கத்தா 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கவுதம் காம்பீர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டிராபியை வென்றது குறித்து பேசிய கவுதம் காம்பீர் கூறியிருப்பதாவது: இன்னும் 3 டிராபி வெல்ல வேண்டும். அப்போது தான் அதிக முறை டிராபி வென்ற அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் திகழும் என்று காம்பீர் கூறியுள்ளார். இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயரது கேப்டன்ஷி மிக சிறப்பாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News