Jan 17, 2026
Thisaigal NewsYouTube
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மார்: பலி எண்ணிக்கை 2,700ரைத் தாண்டியது
உலகச் செய்திகள்

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மார்: பலி எண்ணிக்கை 2,700ரைத் தாண்டியது

Share:

மியன்மார், ஏப்ரல்.02-

மியான்மாரில், கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு நான்கு நாட்களைக் கடந்த நிலையில், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது.

இந்நிலையில், மியான்மாரின் நய்பிடாவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியின்போது கட்டட இடிபாடுகளில் சிக்கி, 91 மணி நேரத்திற்கு பின், 63 வயதான மூதாட்டி ஒருவரை மீட்புக்குழு உயிருடன் மீட்டது. இதனிடையே, இடிபாடுகளில் இருந்து ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பலி எண்ணிக்கை 2,700 ரைத் தாண்டியுள்ளது.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மியான்மாரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவ உதவிகளும் மியான்மார் மக்களுக்கு உடனடித் தேவையாக உள்ளது. போதிய குடிநீர் வசதியும் இல்லாததால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

Related News