மாட்ரிட்: வெறும் 10 வயதே ஆன சிறுமி மூளை உண்ணும் அமீபா காரணமாக உயிரிழந்த மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த தகவல்கள் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது.
மாட்ரிட்: வெறும் 10 வயதே ஆன சிறுமி மூளை உண்ணும் அமீபா காரணமாக உயிரிழந்த மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த தகவல்கள் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது.
வெயில் காலத்தில் சில் செய்யப் பலரும் நீச்சல் குளங்களில் ஜாலியாக ஒரு குளியலைப் போடுவார்கள். பொதுவாக நம்ம ஊர்களில் ஏரி, குளங்களில் தான் குளியலைப் போடுவார்கள். சிலர் இதனால் எங்கே தங்களுக்கு நோய்ப் பாதிப்பு ஏற்படுமோ என்றும் அஞ்சுவார்கள்.
அதுபோல அஞ்சும் நபர்கள் ஏரி, குளங்களைத் தவிர்த்துவிட்டு நீச்சல் குளங்களில் குளிப்பார்கள். ஆனால், இங்கே அதுவே ஒரு சிறுமியின் உயிரைப் பறித்துள்ளது. பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 வயது சிறுமி: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஸ்டெபானியா வில்லமிசார் கோன்சாலஸ் என்பவர் தான் இப்படி உயிரிழந்துள்ளார். 10 வயதே ஆன இந்த சிறுமி, பாலே நடனமும் பயின்று வருகிறாராம். இவர் குடும்பத்தினருடன் விடுமுறைக்குச் சென்ற போது, நீச்சல் குளத்தில் குளித்துள்ளார். இருப்பினும், சில நாட்களில் அவருக்குக் காது வலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.