Oct 17, 2025
Thisaigal NewsYouTube
இலங்கையில் பேருந்து கவிழ்ந்ததில்15 பேர் பலி
உலகச் செய்திகள்

இலங்கையில் பேருந்து கவிழ்ந்ததில்15 பேர் பலி

Share:

கொழும்பு, செப்டம்பர்.05-

இலங்கையில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்டோரை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, மீட்புப் படையினர் விரைந்தனர்.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒன்பது பெண்கள் ஆவர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related News