Jan 17, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவில் நடந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர் சுட்டுக் கொலை
உலகச் செய்திகள்

இந்தியாவில் நடந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய நபர் சுட்டுக் கொலை

Share:

புதுடெல்லி, மே.19-

இந்தியாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ரசவுல்லா நிஸாமனி என்ற அபு சயியுல்லா என்பவர், பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அவரை அடையாளம் தெரியாத சிலர் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நடந்த 3 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இவர் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. 2001இல் காஷ்மீரின் ராம்பூரில் சிஆர்பிஎப் முகாம் மீது நடந்த தாக்குதல், 2005ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இந்திய அறிவியல் மாநாடு மீதான தாக்குதல், 2006இல் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது நடந்த தீவிரவாத தாக்குதல் ஆகியவையே அவை.

இந்நிலையில், அபு சயியுல்லாவின் கொலைக்கு எந்த அமைப்பும் இதுவரை உரிமைக் கோரவில்லை.

Related News