கராச்சி, ஆகஸ்ட்.14-
பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி கராச்சியில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது, வான்வழி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் இன்று சுதந்திர தினமாகும். இது போன்ற தினங்களில் பாகிஸ்தானியர்கள் வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், கராச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, 8 வயது சிறுமி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதே போல பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஜனவரி மாதம் இதே போன்ற கொண்டாட்டத்தில் 5 பெண்கள் உள்பட 42 பேர் வான்வழி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.