Oct 22, 2025
Thisaigal NewsYouTube
ஹெய்ட்டியில் மீண்டும் துப்பாக்கி தாக்குதல்கள்: உதவிக்கோரிய பொதுமக்கள்
உலகச் செய்திகள்

ஹெய்ட்டியில் மீண்டும் துப்பாக்கி தாக்குதல்கள்: உதவிக்கோரிய பொதுமக்கள்

Share:

நாட்டின் மத்திய பிராந்தியத்தில் குறைந்தது 115 பேர் படுகொலை செய்யப்பட்டு, ஒரு வாரத்துக்குள், துப்பாக்கிதாரிகள், ஹெய்ட்டியின் தலைநகருக்கு வடக்கே மற்றொரு நகரத்தை ஆக்கிரமித்து, தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது, மக்கள் மீது துப்பாக்கி தாக்குதல்களை நடத்திய அவர்கள், வீடுகளுக்கு தீ வைத்தனர். எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உடனடியாக தெரியவில்லை.

கடலோர நகரமான அர்காஹேயில் வசிப்பவர்கள் வானொலி நிலையங்களுக்கு அழைப்பு விடுத்து உதவிக்காக கெஞ்சுகின்றனர்.

அத்துடன், பொலிஸார் வந்து தங்களைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வன்முறை குழுக்கள்

துப்பாக்கிதாரிகள் விடியற்காலையில் நகரத்தைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பல வானொலி நிலையங்கள் தலிபான் என்று அழைக்கப்படும் குழுவினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன.

இந்த குழு, சுமார் 200 உறுப்பினர்களைக் கொண்டு, தலைநகரின் வடக்குப் பகுதியில் செயல்படுகிறது. இதேவேளை மற்றுமொரு குழு கடந்த வியாழனன்று நாட்டின் மத்திய பிரதேசம் ஒன்றில் நடத்திய தாக்குதலில், 115இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

ஹெய்ட்டியின் தலைநகர் பகுதிகளில் பல்வேறு துப்பாக்கத்தாரிகளின் வன்முறை குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.

Related News