Oct 13, 2026
Thisaigal NewsYouTube

சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர விண்ணில் பாய்ந்தது 'பால்கன் - 9' ராக்கெட்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர விண்ணில் பாய்ந்தது 'பால்கன் - 9' ராக்கெட்

வாஷிங்டன், மார்ச்.15-

9 மாதங்களாக அனைத்துகக விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்டிருக்கும், சுனிதா வில்லியம்ஸையும், வில்மோரையும் அழைத்து வர விண்ணில் 'பால்கன் - 9' ராக்கெட் பாய்ச்சப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா எனப்படும் விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில், கடந்தாண்டு ஜூன் மாதம், 5ம் தேதி, இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் உள்ள அனைத்துலக விண்வெளி மையத்துக்குப் பயணமானார். அவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்றார்.

எட்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து இவர்கள் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் சென்ற ராக்கெட் பழுதடைந்ததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து பலமுறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.

தற்போது 9 மாதங்களை எட்டியுள்ள நிலையில், அவர்களை அழைத்து வர, சில தினங்களுக்கு முன் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட்டை செலுத்துவதாக இருந்தது. கடைசி நேரத்தில், 'பால்கன் - 9' ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அத்திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று புளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 'பால்கன் - 9' ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. விரைவில் விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும், சுனிதா, வில்மோர் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →