Jun 13, 2026
Thisaigal NewsYouTube
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
உலகச் செய்திகள்

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்

Share:

கரூர், செப்டம்பர்.28-

கரூர் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த உடனே பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். அவர் சமூக வலைதளத்தில் தமிழில் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில் பிரதமர் மோடி, ''தமிழகத்தின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்'' எனக் கூறியிருந்தார்.

Related News

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!