Oct 21, 2025
Thisaigal NewsYouTube
வயநாடு நிலச்சரிவு எதிரொலி: தமிழக அரசு அதிரடி உத்தரவு
உலகச் செய்திகள்

வயநாடு நிலச்சரிவு எதிரொலி: தமிழக அரசு அதிரடி உத்தரவு

Share:

இந்தியா, ஆகஸ்ட் 03-

வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக மழை நாட்களில் கண்காணிப்பு செய்யவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் துறைக்கு உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, மழை நேரத்தில் வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் செய்துள்ளது.

ஏற்கனவே இதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related News