வாஷிங்டன்,பிப்ரவரி 24 -
அமெரிக்காவின் தனியார் நிறுவனம் அனுப்பிய விண்கலம், வெற்றிகரமாக நிலவில் நேற்று பிப்ரவரி ,23 தரையிறங்கி சாதனை படைத்தது.
அமெரிக்காவை சேர்ந்த, 'இன்ட்யூட்டிவ் மிஷின்ஸ்' என்ற தனியார் நிறுவனம், நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்கான விண்கலத்தை, நாசாவுடன் இணைந்து விண்ணில் ஏவியது.
வெற்றிகரமாக பயணத்தை தொடர்ந்த அந்த விண்கலத்தின், ஒடிசியஸ் எனப் பெயரிடப்பட்ட, 'லேண்டர்' கருவி, நிலவின் தென் துருவம் அருகே நேற்று வெற்றிகரமாக தரை இறங்கியது.
நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பதற்றமான நிமிடங்களுக்கு பின், நிலவில் இருந்து முதல் புகைப்படம் பூமியை வந்தடைந்தது.
விஞ்ஞானிகள் உற்சாக குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த, 1972ல் அமெரிக்காவின் 'அப்பல்லோ 17' விண்கலம் நிலவில் முதல்முறையாக தரையிறங்கியது. அதன் பின், 50 ஆண்டுகளுக்கு பின், 'ஒடிசியஸ்' லேண்டர் நிலவில் தரையிறங்கி அமெரிக்காவுக்கு பெருமை சேர்த்துள்ளது