Oct 11, 2026
Thisaigal NewsYouTube

லிவர்பூல் வெற்றி அணிவகுப்பில் கார் புகுந்ததில் 50 பேர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லிவர்பூல் வெற்றி அணிவகுப்பில் கார் புகுந்ததில் 50 பேர் காயம்

லண்டன், மே.27-

இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இந்த அணியினர் லிவர்பூல் நகரில் வெற்றி அணிவகுப்பு நடந்தினர். இந்த கூட்டத்திற்குள் ஒரு கார் மோதியதில் 50 பேர் காயம் அடைந்தனர். இதில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 53 வயது பிரிட்டிஷ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக கார் நின்றதும் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு ஜன்னல்களை உடைத்தனர். கார் டிரைவரை மக்கள் தாக்க முயற்சி செய்த போது போலீசார் தடுத்து நிறுத்தனர். இச்சம்பவம் பயங்கரமானது என பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் கண்டனம் தெரிவித்தார். மேலும் போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →