Oct 24, 2025
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

மேலும் 487 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா

Share:

புதுடெல்லி, பிப்.7

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய மேலும் 487 இந்தியர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு கூறியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களின் கைகளில் விலங்கு போட்டு, கால்களில் சங்கிலி மாட்டி ராணுவ விமானத்தில் கொண்டு வந்து இறக்கிய நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த பிரச்னை நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது. ராஜ்யசபாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில், டில்லியில் நிருபர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை செயலாளர், வரும் பிப்.,10 -12 தேதிகளில் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி பிப்.,12, 13 ஆகிய தேதிகளில் அமெரிக்காவிற்கு செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை சந்திக்க உள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். நாடு கடத்தப்படுபவர்களை, முறையாக கையாள வேண்டும் என அமெரிக்காவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.

இதனிடையே, அமெரிக்காவில் இருந்த சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்கள் மோசமாக கையாண்ட விதம் குறித்த அமெரிக்கா அரசிடம் இந்திய அரசு கேள்வி எழுப்பி உள்ளதாக தகவல் தகவல் வெளியாகி உள்ளது.

Related News