Sep 13, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரில் 'ஏஐ' திறன்களை மேம்படுத்த ஓப்பன்ஏஐ நிறுவனம் $300 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு!
உலகச் செய்திகள்

சிங்கப்பூரில் 'ஏஐ' திறன்களை மேம்படுத்த ஓப்பன்ஏஐ நிறுவனம் $300 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு!

Share:

செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அன்றாடப் பணிப்பாய்வுகளில் ஒருங்கிணைத்து உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில், வளர்ந்து வரும் சிங்கப்பூரின் பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவுத் துறையைக் கட்டமைப்பதற்காகச் சேட்ஜிபிடியை உருவாக்கிய 'ஓப்பன்ஏஐ' நிறுவனம் 300 மில்லியனுக்கும் அதிகமான டாலர் தொகையை ஒதுக்கியுள்ளது.

அமெரிக்காவிற்கு வெளியே தனது முதல் ஆய்வகமான 'ஓப்பன்ஏஐ சிங்கப்பூர் பயன்பாட்டு ஏஐ ஆய்வகத்தை' இங்கு திறப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த ஆய்வகம் பொதுச் சேவைகள், நிதி, சுகாதாரத் துறைகள் மற்றும் மின்னிலக்க உள்கட்டமைப்பு ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவுப் பணிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும். இந்த நிதி ஒதுக்கீட்டிற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், ஓப்பன்ஏஐ நிறுவனம் சிங்கப்பூரின் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சுடன் 'சிங்கப்பூருக்கான ஓப்பன்ஏஐ' என்ற ஒப்பந்தத்தில் புதன்கிழமையன்று (மே 20) கையெழுத்திட்டுள்ளது. கபெல்லா சிங்கப்பூர் ஹோட்டலில் நடைபெற்ற ஆசியா டெக் x சிங்கப்பூர் மாநாட்டின் ஒரு பகுதியான ATxSummit நிகழ்வில் இந்த கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலிருந்து மேலும் பல நிறுவனங்கள் பயனடைய உதவவும், அடுத்த தலைமுறை உள்ளூர் செயற்கை நுண்ணறிவுத் திறமையாளர்களை ஆதரிக்கவும், நாடு முழுவதும் இந்தக் கருவிகளுக்கான அணுகலை விரிவுபடுத்தவும் விரும்புவதாக ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் தலைமை வருவாய் அதிகாரி டெனிஸ் டிரெஸ்ஸர் தெரிவித்துள்ளார்.

Related News

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

அன்வாரின் கேரள பயணம்: மலேசியா - தென்னிந்தியா உறவில் உருவாகப் போகும் புதிய வாய்ப்புகள்

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்