Oct 17, 2025
Thisaigal NewsYouTube
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது
உலகச் செய்திகள்

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது

Share:

கொழும்பு, ஆகஸ்ட்.22-

லண்டன் பயண நிதி முறைகேடு வழக்கில், இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இன்று கைது செய்யப்பட்டார்.

76 வயது ரணில் , இலங்கை பொருளாதார ரீதியாக திவால் நிலையை எட்டிய போது, அதிபராகப் பொறுப்பேற்று மீண்டும் நிலைமையைச் சீர்ப்படுத்தியவர்.

ரணில், அதிபராக இருந்த போது கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் பயணம் மேற்கொண்டார். அவரது மனைவி மைத்ரி, லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதை முன்னிட்டு இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில், ரணில் உள்ளிட்ட சிலரும் கலந்து கொண்டுள்ளனர். இதற்கென அரசு நிதியை முறைகேடாக அவர் பயன்படுத்தி உள்ளார் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related News

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது | Thisaigal News