Jan 28, 2026
Thisaigal NewsYouTube
வாலிபர் தற்கொலை செய்த விவகாரம்: சில்மிஷம் செய்ததாக வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணின் ஜாமீன் மனு தள்ளுபடி
உலகச் செய்திகள்

வாலிபர் தற்கொலை செய்த விவகாரம்: சில்மிஷம் செய்ததாக வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணின் ஜாமீன் மனு தள்ளுபடி

Share:

திருவனந்தபுரம், ஜனவரி.28-

கேரளா, கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் (41) என்ற வாலிபர் ஓடும் பஸ்சில் வைத்து தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறி ஷிம்ஜிதா முஸ்தபா (35) என்ற இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன் தான் எடுத்த ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வெளியான மறுநாளே வாலிபர் தீபக் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தீபக்கின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஷிம்ஜிதா முஸ்தபா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவர் ஜாமீன் கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றமொன்றில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஷிம்ஜிதாவின் ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்தார்.

Related News