Nov 2, 2025
Thisaigal NewsYouTube
ஆந்திராவில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
உலகச் செய்திகள்

ஆந்திராவில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி

Share:

அமராவதி, நவம்பர்.01-

ஆந்திராவில் கோவிலொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அக்கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரபலமானது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோவிலில் பண்டிகையொன்றையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related News